‘துப்பாக்கி’ தோட்டா ரெடி…

     கடந்த சில வாரங்களாக  இழுத்துக் கொண்டு வந்த ‘துப்பாக்கி’ மற்றும் ‘கள்ளத் துப்பாக்கி’  டைட்டில் பிரச்சனை தற்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

கள்ளத் துப்பாக்கி குழுவினர் ஒரு வழியாக வழக்கை வாபஸ் (?) பெற்று விட்டதால், ‘துப்பாக்கி’ குழுவினருக்கே மீண்டும் எந்த பிரச்சனையும் இல்லாமல் டைட்டில் கிடைத்து விட்டது.

இதைத் தொடர்ந்து துப்பாக்கியின் மற்ற புரமோஷன் வேலைகள் ஆரம்பமாக விட்டன. வரும் 10ம் தேதியன்று படத்தின் டிரைலரும, 11ம் தேதியன்று படத்தின் ஆடியோ வெளியீடும் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிக்கு படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தீபாவளிதான்.

Read Previous

இங்கிலிஷ் விங்கிலிஷ் – விமர்சனம்

Read Next

அஜித்,அனுஷ்கா,சந்தானம் இணையும் படம்