இங்கிலிஷ் விங்கிலிஷ் – விமர்சனம்

தயாரிப்பு – ஈராஸ் இன்டர்நேஷனல், ஆர். பால்கி எழுத்து, இயக்கம் – கௌரி ஷின்டே இசை – அமித் திரிவேதி பாடல்கள் – பா. விஜய் ஒளிப்பதிவு – லஷ்மன் உடேகர் படத்தொகுப்பு – ஹேமந்தி சர்கார் மக்கள் தொடர்பு – நிகில் வெளியான தேதி – 5 அக்டோபர் 2012.

     இப்படி ஒரு படத்தைப் பார்த்து எத்தனை நாளாச்சி. சும்மா சொல்லக் கூடாது, நேரடி தமிழ்ப் படங்களை பார்க்கிற சுகத்தை விட, ஹிந்தியில இருந்து தமிழ் பேச வந்தாலும்,  படம் பார்க்கிற எல்லாரையும் பேச வச்சிடும் இந்த படம்.

அழகான, குடும்பத்தை மட்டுமே கவனிச்சிக்கிற குடும்பத் தலைவி ஸ்ரீதேவி. கணவர், மகள் எல்லாருமே இவங்க அதிகம் படிக்காததுனால அடிக்கடி அவ மரியாதை செய்யறாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாலு பேர் எதிர்ல ஆங்கிலம் பேசத் தெரியாததுதான்.

ஸ்ரீதேவி ஒரு சைட் பிஸினசா அழகழகா ( ) லட்டு செஞ்சி வீடு வீடா கொடுக்கிறாங்க. லட்டு மட்டுமே செய்யத்தான் லாயக்குன்னு மத்தவங்க நினைக்கிறத  மாத்தி  எப்படி அருமையா ஆங்கிலம் பேசறாங்கன்றதுதுன் படத்தோட கதை.

 நியூயார்க்குல இருக்கிற  அக்கா பொன்னு கல்யாணத்துக்காக ஸ்ரீதேவி அங்க போறாங்க. திடீர்னு ஒரு நாள் நாலு வாரத்தில ஆங்கிலம் கத்துக்கற கிளாஸ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. யாருக்கும் தெரியாம படிச்சி கடைசி நாள் பரீட்சைக்கு போற அன்னிக்கு, வீட்டுல நடக்கிற சின்ன சம்பவம் அவங்கள பரீட்சைக்கு போக விடாம தடுத்துடுது. அதுக்குக் காரணம் அவங்க குடும்பத்து மேல வச்சிருக்கிற பாசம்தான். படிப்பை விட பாசம்தான் பெருசுன்னு முடிவெடுத்துடறாங்க. அப்புறம் என்ன நடக்குதுன்கறதுதான் படத்தோட கிளைமாக்ஸ்.

ஸ்ரீதேவி, ஸ்ரீதேவிதான். இல்லன்னா இத்தனை வருஷம் கழிச்சு வந்தும் இப்படி ஒரு பர்ஃபாமன்ஸ் கொடுக்க முடியுமா. நடுக்கத்துல அவங்க கை விரல்களை கூட நடிக்க வைக்கிறாங்க. படம் முழுக்க  புடவையில மட்டுமே வந்தாலும் அவங்க அழகும், எக்ஸ்பிரஷனும் தனி. கிளைமாக்ஸ்ல அவங்க பேசும் போது , நம்மையும் மீறி கை தட்ட வைக்கிறது ஸ்ரீதேவி நடிப்புக்கு நாம தர்ற பரிசு.

ஸ்ரீதேவி அக்கா மகளா பிரியா ஆனந்த். சித்தி மேல அதிகம் பாசம் வச்சிருக்கிறாங்க. ஸ்ரீதேவிக்கு அடிக்கடி உதவியும் செய்யறாங்க. யதார்த்தமா இருக்கு இவங்க கதாபாத்திரம்.

அந்த பிரெஞ்ச் ஸ்டூடன்ட்டா வர்ற ‘மேதி’ பார்வையிலயே ஸ்ரீதேவியை லவ் பண்ண ஆரம்பிச்சிடறாரு. கடைசி வரைக்கும் அந்த காதலோடவே இருக்கிறது சூப்பர்.

சிறப்புத் தோற்றத்தில் கொஞ்ச நேரமே தலை காட்டினாலும் ‘தல’ தலதான்.

கதையோட்டத்துக்கு துணையா லஷ்மன் உடேகர் ஒளிப்பதிவும், அமித் திரிவேதி இசையும் அமைஞ்சிருக்கு.

ஒரு தரமான படத்தைக் கொடுத்ததுக்காக இயக்குனர் கௌரி ஷின்டேக்கு பெst  Wiஷஸ்.

மிஸ் பண்ணாம படத்தைப் பாருங்க.

Read Previous

ராம் சரண் நடிக்கும் ‘ராம் சரண்’

Read Next

‘துப்பாக்கி’ தோட்டா ரெடி…