நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைக்கும் படம் ‘வாலு’. சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சிம்பு நடித்த ‘போடா போடி’ தீபாவளிக்கு வெளியானதைத் தொடர்ந்து ‘வாலு’ படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
‘வாலு’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் பரபரப்பாக ஆரம்பமாகியுள்ளது. அடுத்த மாதம் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிம்பு, ஹன்சிகா இப்படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.
சிம்பு, சந்தானம், விடிவி கணேஷ் கூட்டணியில் ஒரு கலகலப்பான படமாக இப்படம் உருவாகி வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.