12-12-12 அலெக்ஸ் பாண்டியன் இசை வெளியீடு

     alexpandian12-12-12 , இந்த வருடத்தின் சிறப்பான நாளில் ஒன்றாக அமையப் போகிறது, காரணம் நாள், மாதம், வருடம் அனைத்துமே 12ல் வருவதுதான். இந்த சிறப்பான நாளில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளும் கூட.  1982ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘மூன்று முகம்’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த ஒரு கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் , சுராஜ் இயக்கத்தில் , கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார்.

சென்னை, சத்யம் திரையரங்களில் இப்படத்தின் வெளியீடு நடைபெற இருக்கிறது.

Read Previous

பொங்கலுக்கு ’வாலு’

Read Next

கன்னடப் படம் இயக்கும் ‘சிலந்தி’ இயக்குனர்