2008ல் வெளியாகி டிஜிட்டல் சினிமா புரட்சிக்கு வித்திட்ட ‘சிலந்தி’ வெற்றிப் படத்தை இயக்கிய ஆதி, ‘நரன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது கன்னடத்தில் ‘ ரண தந்திரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய ராகவேந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடிக்கும் 36வது படம் இது.
கதாநாயகியாக ஹரிப்ரியா நடிக்கிறார். தமிழில இவர் கரனுடன் ‘கனகவேல் காக்க’, அர்ஜுனுடன் ‘வல்லக் கோட்டை’, சேரனுடன் ‘ முரண்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்து வரும் இவரின் 18வது படம்தான் ‘ரண தந்திரா’.
ஆர். மனோஜ்குமார் யாதவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். ரமேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்து விட்டது.
தமிழில், மழை, பொக்கிஷம், லீ, ராமன் தேடிய சீதை, சில்லுன்னு ஒரு சந்திப்பு போன்ற படங்களுக்கு ஒளிப்திவு செய்த ராஜேஷ் யாதவ் இப்படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறார்.
‘சிலந்தி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய கார்த்தி-யை இப்படத்தின் மூலம் கன்னடத்திற்கும் அறிமுகப்படுத்துகிறார்.
வரும் பிப்ரவரி – 14ல் திரைக்கு கொண்டு வரும் திட்டத்தில் இப்படத்தை இயக்கி வரும் ஆதி தனது பெயரை இப்படத்தில் ஆதிராம் என மாற்றியிருக்கிறார்.
தனது மானசீக குருவான இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது கொண்ட மரியாதையே பெயர் மாற்றத்துக்கு காரணம் என்கிறார் ஆதிராம்.