‘நெய்தல்’ நிலமான கடலை மையமாக வைத்து ஒன்றன் பின் ஒன்றாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
சமீபத்தில்தான் சீனு ராமசாமி இயக்கத்தில் கடல் சார்ந்த ‘நீர்ப்பறவை’ படம் வெளியானது.
மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘கடல்’ படமும் கடல் சார்ந்த படம்தான் என்பதை சொல்லத் தேவையில்லை.
பிஜோய் நம்பியார் விக்ரம், ஜீவாவை வைத்து இயக்கி வரும் ‘டேவிட்’ படமும் கடல் சார்ந்த படம்தான்.
வசந்த் இயக்கி வரும் ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் ஒரு கதையும் கடல் சார்ந்த கதைதான்.
அடுத்து வைரமுத்து எழுதிய கடல் சார்ந்த நாவலான ‘தண்ணீர் தேசம்’ திரைப்படமாக இருக்கிறது.
இன்னும் தெரியாமல் எத்தனை பேர் எடுக்கிறார்களோ ?
மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்தில் கார்த்திக் மகன் கௌதம் ஹீரோவாகவும் , ராதாவின் இளைய மகள் துளசி ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். இதுவரை இவர்களது முகங்களைக் கூட காட்டாமல் இருந்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.
தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வமான ஒரு விளம்பரத்தை கொடுத்திருக்கிறார்கள். அதில் கூட நாயகன் கௌதம் முகத்தை திருப்பிக் கொண்டுதான் இருக்கிறார்.
ஹீரோயின் துளசி எப்படி இருப்பார் என இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவரும் அடுத்து ஜீவா ஜோடியாக ‘யான்’ படத்தில் நடிக்கச் சென்று விட்டார். அவர்களும் துளசி போட்டோவை வெளியிடாமல் பொத்தி பொத்தி வைத்துள்ளார்கள்.
இனி, எல்லாரும் இப்படியே ஆரம்பிச்சிட்டால் ரொம்ப நல்லா இருக்கும் !!!!!!! .