விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் – தமன்னா ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை பாடல் பதிவுடன் நேற்று நடந்தது.
இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு முதல் முறையாக இவர் இசையமைக்கும் படம் இது.
பாடல் பதிவின் போது படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் சிவா பாடலுக்குரிய காட்சியமைப்பை விளக்க, அதற்கான பாடலை பதிவு செய்தார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்.