தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ராகவா லாரன்ஸுக்கு 2.5 கோடி அபராதம் விதித்துள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், பிரபாஸ், தமன்னா நடிப்பில் ‘ரிபெல்’ என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
மேலும், படம் தயாரிப்பில் இருந்த போதே படத்தின் தயாரிப்பாளர்கள் புல்லா ராவ், பகவான் ஆகியோருக்கும் ராகவா லாரன்ஸுக்கும் பிரச்சனைகள் எழுந்தன. 22.5 கோடியில் லாரன்ஸ் படத்தை முடித்து தருவதாக சொன்னதாகவும், கடைசியில் 35 கோடி வரை செலவு செய்து விட்டார் என தயாரிப்பாளர்கள் , தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்திருந்தனர்.
இந்த புகாரை விசாரித்த, தயாரிப்பாளர்கள் சங்கம் ராகவா லாரன்ஸுக்கு 2.5 கோடி அபராதம் விதித்துள்ளனர்.
தெலுங்கில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘மாஸ்’, ‘ஸ்டைல்’, ‘டான்’, ‘முனி – 2’ சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ‘முனி – 3 ’ படத்தை இயக்கவுள்ளார் லாரன்ஸ்.