மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘கடல்’. கௌதம், துளசி நாயர், அர்ஜுன் , லட்சுமி மஞ்சு, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று வெளியிடப்படுவதாக இருந்து, இரண்டு நாட்கள் முன்னதாகவே அதாவது 15ம் தேதியன்றே வெளியிடப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே ‘கடல்’ படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
‘ராவணன்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் என்பதாலும், ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் படம் என்பதாலும், இருவருக்குமே ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படம் வருவதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
‘கடல்’ சார்ந்த பல கதைகள் வந்து கொண்டிருக்கும் நேரம், இந்த முன்னணி கூட்டணி கடல் சார்ந்த கதையை எப்படி சொல்லப் போகிறது என்ற ஆவல் திரையுலகினருக்கும் அதிகமாகவே இருக்கிறது.