தலைப்பைப் பார்த்ததும் எந்த திரையுலகம்னு கொஞ்சம் குழம்ப வேணாம். கண்டிப்பா தமிழ்த் திரையுலகம் இல்ல…கொண்டாடறது தெலுங்கு திரையுலகம்.
நமக்கு எப்பவுமே உள்ளூர் அழகிகளைக் கண்டால் பிடிக்காது. மலையாளத்துல இருந்து வந்தாலோ, இல்ல மும்பைல இருந்து வந்தாதான் கொண்டாடுவோம். ஏன் கோயில் கூட கட்டுவோம்.
ஆனால், நம்ம ஊரைச் சேர்ந்த சமந்தா சத்தமேயில்லாம தெலுங்குல முன்னணி நடிகையா மாறி நம்பர் 1 இடத்துக்கு சீக்கிரமே போகப் போறாங்க.
தொடர்ந்து 5 ஹிட் படம் தெலுங்குல, அடுத்ததா பொங்கலுக்கு வர்றப் போற படமும் கண்டிப்பா ஹிட் ஆகும், ‘சமந்தா’ ராசி அப்படின்னு சொல்லிக்கிறாங்க.
‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தோட தெலுங்கு ரீமேக் வர்ஷனான ‘ஏதோ வெள்ளிப் போயிந்தி மனசு’ படத்தைப் பார்த்துட்டு தெலுங்கு ரசிகர்கள் ஆஹா, ஓஹோன்னு கொண்டாடுறாங்க..
இனி, சமந்தாவை ‘சக்சஸ் ஹீரோயின்’ சமந்தான்னு தான் சொல்வாங்க போல…..