ஆந்திராவை அசத்தும் அமலா பால்

     மலா பால் அறிமுகமான முதல் தமிழ்ப் படம் எது என்று கேட்டால் , ஆளாளுக்கு ஒன்று சொல்வார்கள்.

 அமலா பால் நடித்த வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா ஆகிய படங்கள் 2010ல் வெளிவந்தன. இவர் நடித்த விகடகவி 2011ல் வெளிவந்தது.

இவர் நடித்து வெளிவந்த முதல் படம் என்றால் ‘வீர சேகரன்’ தான். மார்ச்  5, 2010ல் வெளிவந்தது. மற்ற படங்கள் இதன் பின்னர்தான் வெளியாகின. ஆனால் ‘சிந்து சமவெளி’ படம் பரபரப்பையும், ‘மைனா’ படம் புகழையும் பெற்றுத் தந்தது.

2011ல் வெளிவந்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன் பின்னர் இந்த ஆண்டு வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள்,   ஆகிய படங்கள் இவர் நடித்து வெளிவந்தவை.

தமிழில், இப்போது விஜய் ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். ‘நிமிர்ந்து நில்’ படத்தில் ஜெயம் ரவியுடனும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் 2011ல், பெஜவாடா, லவ் பெயிலர் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது, நாயக், ஜன்டா பை காபிராஜு, இத்தாரமாயிலதோ ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில்‘நாயக்’ திரைப்படத்தில் ராம் சரண் தேஜாவுடன் ஹீரோயினாக நடித்து வருவதால் அங்கு அவருக்கு தற்போது அதிகமான ‘பாப்புலாரிட்டி’ கிடைத்துள்ளது.

தமிழில் ‘விஜய்’யுடன் நடிப்பதும் இங்கு பரபரப்பாகவே பேசப்படுகிறது.

ம்ம்..அமலா பாலுக்கு வரப் போகிற 2013 அதிர்ஷ்டமான ஆண்டுதான்….

Read Previous

சமந்தாவைக் கொண்டாடும் திரையுலகம்

Read Next

இசையமைப்பாளரை மாற்றிய ராஜேஷ்

Most Popular