இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் ஒன்றாக இணைந்து பணி புரிந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தது அந்தக் காலம்.
ஆனால், இப்போது, ரசிகர்கள் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று, படத்துக்குப் படம் கூட்டணியை மாற்றுவதும் சிலருக்கு வழக்கமாகி விட்டது.
அந்த வரிசையில், இயக்குனர் ராஜேஷும் இடம் பெற்று விட்டார். சமீபத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹாரிஜ் ஜெயராஜுடன் இணைந்து இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் ராஜேஷ்.
இதற்கு முன், பாஸ் (எஸ்) பாஸ்கரன், சிவா மனசுல சக்தி, இரண்டு படங்களிலும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசை அந்த படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
அடுத்து, கார்த்தியை வைத்து ராஜேஷ் இயக்கப் போகும்‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி எழுந்திருந்தது. இப்போது, தமன் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 3 பாடல்களையும் பதிவு செய்து விட்டார்கள் என்கிறார்கள்.
இந்த புது கூட்டணி எப்படி அமையப் போகிறது…பொறுத்திருந்து பார்ப்போம்.