வரிசை கட்டும் படங்கள்…

pongal release

2013ம் ஆண்டின் திரைப்பட வெளியீடுகள் இன்று முதல் ஆரம்பமாகி விட்டன.

இன்று மட்டும் நண்பர்கள் கவனத்திற்கு, குறும்புக்கார பசங்க, கள்ளத் துப்பாக்கி, மயில் பாறை, கனவு காதலன் ஆகிய படங்கள் வெளியாகின்றன.

இவை அனைத்தும் மிகப் பெரிய நட்சத்திரங்கள் இல்லாத சிறு முதலீட்டுப் படங்களே.

அடுத்த வாரம் பொங்கலை முன்னிட்டு மேலும் சில படங்கள் வெளியாகின்றன. அவை அனைத்துமே பெரிய படங்கள்தான். கமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் ‘விஸ்வரூபம்’,  கார்த்தி நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’,  சந்தானம் நடிப்பில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ , விஷால் நடிப்பில் ‘சமர்’ ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வர உள்ளன.

இவற்றில் ‘விஸ்வரூபம்’ திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்னரே டிடிஎச் மூலம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு புதிய வியாபாரம் ஆரம்பமாக உள்ளது.

பொங்கலுக்குப் பின் அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ‘ஆதி பகவன்’, சினேகா நடிப்பில் ‘ஹரிதாஸ்’, பாலா இயக்கத்தில் ‘பரதேசி’, மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மதகஜராஜா’  என வரிசையாக பல படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளன.

மார்ச் மாதம் பள்ளித் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளதால் இந்த மாதமும், பிப்ரவரி மாதத்திலும் பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

‘ஐ’ படத்திற்காக கடுமையாக உழைக்கும் விக்ரம்

Read Next

மலேசியா செல்கிறார் சமந்தா