ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘ஐ’.
கடந்த சில படங்கள் விக்ரமுக்கு மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்தித் தரவில்லை என்பதுதான் உண்மை.
தேசிய விருது பெற்ற ஒரு நடிகருக்கு, தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுக்கவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்யும். அவருடைய நடிப்புப் பசிக்கு சரியான தீனி போடும் படங்களாக கடந்த சில படங்கள் அமையவில்லை என்பதும் அதற்கு ஒரு காரணம்.
இந்த குறையை எல்லாம் போக்குவதற்காக ‘ஐ’ படத்தில் விக்ரம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கடுமையாக உழைத்து வருகிறார் என்பது மேலே இருக்கும் படத்தைப் பார்த்தாலே புரியும்.
முதல் புகைப்படம் ‘தாண்டவம்’ படத்தின் பிரஸ்மீட்டில், 2012 ஜுலை மாதம் எடுக்கப்பட்டது.
இரண்டாவது புகைப்படம் ‘டேவிட்’ படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் 2012 டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது.
மூன்றாவது புகைப்படம் ‘டேவிட்’ பட இசை வெளியீட்டில் நேற்று , அதாவது ஜனவரி 4, 2013 அன்று எடுக்கப்பட்டது.
முதல் இரண்டு புகைப்படங்களின் தோற்றத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்தனர்…எப்படி இருந்த விக்ரம் ‘ஐ’ படத்துக்காக இப்படி ஆயிட்டாரே..என்று…
ஆனால், நேற்று எடுக்கப்பட்ட ‘டேவிட்’ இசை வெளியீட்டு விழாவில் அவருடைய தோற்றத்தைப் பார்த்து அனைவரும் மீண்டும் ஒரு முறை ஆச்சரியமடைந்தனர்.
திரும்பவும் அவருடைய பழைய தோற்றத்தில் இருந்தார். எப்படி இவரால் மட்டும் உடம்பை இளைக்கவும் , ஏற்றவும், முடிகிறது என்று அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்கள் பேசியதும் நம் காதில் விழுந்தது.
ம்ம்…அடுத்த தேசிய விருதுக்கு குறி வைக்கிறாரோ…..
