கௌதம் மேனனை விமர்சிக்கும் சந்தானம்

   nep ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் வர்த்தகரீதியாக எப்படியோ, ஆனால் விமர்சன ரீதியாக நிறையவே விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் இப்போது அந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தானமும்  சேர்ந்து விட்டார்.

சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் தன்னுடைய பங்கை சரியாக செய்ததாகவும், என்னுடைய தப்பு என அந்த படத்தில் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“நகைச்சுவை நடிகன் என்பவன் மழைத் தண்ணீர் மாதிரி, இயக்குனர் என்பவர் பாத்திரம் மாதிரி, தேவையானதை அவங்கதான் பிடிச்சிக்கணும்” என்ற சார்லி சாப்ளின் அவர்கள் சொன்னதை உதாரணமாகக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

இதன் மூலம், அவரை முழுமையாக படத்தில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் சந்தானம்.

ஏற்கெனவே, இந்த படத்தில் இசைஞானியின் இசையை கௌதம் மேனன் வீணடித்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சந்தானத்தின் இந்த விமர்சனமும் மேலும் ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளது.

Read Previous

இன்றைய ரிலீஸ்

Read Next

‘ஐ’ படத்திற்காக கடுமையாக உழைக்கும் விக்ரம்