மலேசியா செல்கிறார் சமந்தா

   dum dum pee pee தமிழில் சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகைகளுள் ஒருவர் சமந்தா.

நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் படங்களுக்குப் பிறகு விரைவில் சூர்யாவுடன் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

தற்போது, சித்தார்த் ஜோடியாக நடிக்கும் ‘டும் டும் பீ பீ’ படத்தின் படிப்பிடிப்புக்காக மலேசியா செல்ல இருக்கிறார். இப்பபாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது. பி.வி. நந்தினி  இந்த படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். நித்யா மேனன் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழில் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறார்கள்.

Read Previous

வரிசை கட்டும் படங்கள்…

Read Next

ஜீவா பிறந்தநாள் கொண்டாட்டம்