10 மணி நேரம் தண்ணீரிலேயே இருந்த நடிகை

     varsha‘பேராண்மை’ மற்றும் ‘நீர்ப் பறவை’ ஆகிய படங்களில் நடித்த வர்ஷா, தற்போது ‘நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (அமைதிப்படை பாகம் 2)படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பொதுவாக ஒரு நடிகை வளர்கிற நேரத்தில் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை விரும்புவதில்லை.

அப்படி நடித்தால் எப்போதும் அவர்களைப் போன்ற நடிகர்கள்தான் அழைப்பார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு வரும்.

ஆனால் வர்ஷா இதை ஒரு வரப்பிரசாதமாகவே எடுத்துக் கொண்டாராம்.

அதாவது, சினிமாவில் அனுபவசாலிகளுடன் சேர்ந்து நடிக்கும்போது இந்த துறையைப் பற்றி நிறைய கற்றுகொள்ள முடியும். அவர்களது  அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள். அதே போல், நான் நினைத்த மாதிரியே சத்யராஜ் சார் நிறைய சொல்லிக் கொடுத்தார் என்கிறார்.

இப்படத்திற்காக பத்து மணி நேரம் எடுக்கப்பட்ட மழைக்காட்சியில் நடித்த வர்ஷாவிற்கு, தொடர்ந்து தண்ணீரில் இருந்ததால் கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டதாம்.

ஆனால் கடைசியில் சத்யராஜ், மணிவண்ணன் இருவரும் பாராட்டிய போது அவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்கிறார்.

இந்திக்கார பெண்ணாக இருந்தாலும் வர்ஷா பேசும் தமிழில் தூத்துக்குடி வாடை.

ஏனென்றால் அவரது அப்பா கப்பல் அதிகாரி என்பதால் கடந்த இருபது வருடங்களாக குடும்பத்தோடு தூத்துக்குடியில்  இருந்திருக்கிறார் .

Read Previous

6வது எடிசன் விருது விழா

Read Next

சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்கு தடை கேட்டு பாக்யராஜ் புகார்