கடந்த 5 ஆண்டுகளாக சினிமா துறைக்கான எடிசன் விருது (EDISON AWARDS) வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
6வது ஆண்டான இந்த ஆண்டு 2012 ஜனவரி முதல் டிசம்பர் 28-ஆம் தேதி வரை வெளி வந்த திரைப்படங்களை இந்திய மற்றும் அயல் நாட்டு தமிழர்களை நடுவர்களாகக் கொண்ட எடிசன் விருது குழு தேர்வு செய்து சிறந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் போன்ற திரைத்துறையினர்களுக்கு 28 விதமான விருதுகளை உலக தமிழர்கள் வாக்களிக்கும் வகையிலும் தேர்வு செய்ய உள்ளது.
அதன் முன்னோட்டமாக, இது வரை எடிசன் விருது பெற்ற கலைஞர்களை அழைத்து கெளரவிக்கும் வகையிலும் இந்த ஆண்டுக்கான நாமினேஷன் பட்டியலை வெளியிடும் விழா இன்று நடைபெறுகிறது.
ஜனவரி 2-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெறப்படும் வாக்குகளும், கணினி பயன்படுத்தாத பாமர மக்கள் தங்களுக்கு பிடித்த கலைஞர்களை தேர்வு செய்யும் விதமாக வாக்குசீட்டு முறையும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பெறப்படும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் திரைக்கலைஞர்களை தேர்வு செய்து, வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி ஞாயிறு மாலை 4.15 மணிமுதல் இரவு 9 மணிவரை எடிசன் விருது விழா நடைபெற உள்ளது.
உலக தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அயல் நாட்டு தமிழ் தொலைக்காட்சி நடிகர்கள், நடிகைகள், நடனக லைஞர்கள், பாடகர்கள், தமிழ் நாட்டு திரைத்துறையினர் உடன் இணைந்து கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
இந்நிகழ்வு இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, லண்டன், கணடா, ஐரோப்பா, வளைகுடா, நாட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.