அஜித்குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையில் விஷ்ணுவர்தன் இயக்கி வரும் புதிய படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்கப்படாமலேயே இருக்கிறது.
இப்போது இந்த படத்தின் டைட்டில் பற்றி அரசல், புரசலாக செய்தி காதில் விழுந்திருக்கிறது.
படத்தில் அஜித் கேரக்டர் ஒரு ‘இன்டர்நெட் ஹேக்கர்’. அதற்குப் பொருத்தமாக டைட்டில் அலசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
‘தலை’ என்று கூட டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அஜித் அதை நிராகரித்ததாகவும் சொன்னார்கள்.
இப்போது படத்தின் கதைக்குப் பொருத்தமாக ‘வலை’ என வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அஜித் நடித்த ‘வ’ வரிசைப்படங்களில் வாலி, வரலாறு, வில்லன் ஆகியவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இந்த ‘வலை’யும் இடம் பெறும் என ‘தலை’யின் ரசிகர்கள் இப்போதே ‘வலை’யின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.