விஜய் நடிக்கும் ‘தலைவா’ படத்தின் புதிய செய்திகள்

thalaivaவிஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம், சுரேஷ், மனோபாலா, பொன்வண்ணன் நடிக்க விஜய் இயக்கி வரும் படம் ‘தலைவா’.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கி நடைபெற்றது.

மிகப் பிரம்மாண்டமான அரங்கில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய ‘தலைவா….தலைவா….’ என்ற பாடலை சின்னி பிரகாஷ் நடனத்தில் படமாக்க உள்ளனர்.

விஜய் நடிக்க அவருடன் 200க்கும் மேற்பட்ட மும்பை  நடனக் கலைஞர்கள், 50க்கும் மேற்பட்ட சென்னை நடனக் கலைஞர்கள், 500 ஜுனியர் ஆர்டிஸ்ட்டுகள் நடிக்க படமாக்கப்படவுள்ளது.

சுமார் 10 நாட்கள் படமாக உள்ள இப்பாடலுக்காக, நடனக் கலைஞர்களுக்கான ஆடை,அணிகலன்கள் ஜெய்ப்பூரிலிருந்து வரவழைக்கப்படுகிறது.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் மிகப் பிரம்மாண்டமான பாடலாக இப்பாடல் உருவாக இருக்கிறது.

தொடர்ந்து இப்படத்திற்காக மும்பையில் இரண்டு பாடல் காட்சிகள், மூன்று சண்டைக் காட்சிகள் படமாக உள்ளன. 50 நாள் படப்பிடிப்பிற்குப் பின் படக் குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்குச் செல்கின்றனர்.

மே மாதம் ‘தலைவா’ வெளிவர இருக்கிறது.

Read Previous

‘தலை’ படத்தின் தலைப்பு ‘வலை’

Read Next

நிஜமாகவே ‘அடி’ வாங்கிய சந்தானம்…

Most Popular