நிஜமாகவே ‘அடி’ வாங்கிய சந்தானம்…

kanna laddu thinna aasaiya_00032பொங்கல் ரேஸில் அனைத்துப் படங்களையும் முந்திக் கொண்டிருக்கிறது ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’.

இப்படத்திற்காக சந்தானம் ரொம்பவே கஷ்டப்பட்டு உழைச்சிருக்காரு. அதனாலதான் இப்ப வெற்றிங்கறது அவருக்கு தாராளமா கிடைச்சிட்டிருக்கு.

நம்ம, ரசிகர்களுக்காக அந்த பட ஷுட்டிங்கல நடந்த சில சுவாரசியமான விஷயங்களை உங்களுக்காக தேடிப் பிடிச்சி கொடுக்கறோம்.

படத்துல ஒரு காட்சியில, ஹீரோயின் விசாகா தம்பி சந்தானத்தை ஒரு சொம்பால அடிக்கிற மாதிரி காட்சி. அடிச்சா வலிக்கும்னு நினைச்ச டைரக்டர், சந்தானம் கிட்ட இந்த காட்சிய டிரிக் ஷாட்டா எடுத்துக்கலாம்னு சொல்லியிருக்காரு. ஆனால் அப்படி எடுத்தால் காட்சி லைவ்வா இருக்காதுன்னு சொல்லி, நிஜமாவே சொம்பால அடி வாங்கியிருக்காரு. அது கொஞ்சம் ரீடேக் வேற வாங்கினதால அடி வாங்கி , அடி வாங்கி சந்தானம் தலையே கொஞ்சம் வீங்கிருச்சாம். ஆனாலும், வலியை காட்டிக்காம சந்தானம் நடிச்சதப் பார்த்து யூனிட்டே பாராட்டுச்சாம்.

அதே மாதிரி இன்னொரு காட்சியில, விடிவி கணேஷ் கிட்ட சந்தானம் பாட்டு  கத்துக்கற காட்சி. ஒரு பெரிய அண்டாக்குள்ள தண்ணில சந்தானம் உட்கார்ந்திருக்க, விடிவி கணேஷ் அவருக்கு பாட்டு சொல்லி கொடுக்கற மாதிரி சீன். ஒரு நாள் முழுக்க தண்ணிலயே சந்தானம் உட்கார்ந்ததால அவருக்கு ஜுரமே வந்துடுச்சாம்.

அப்புறம், கிணத்துல குதிக்கிறது, தலை கீழா நின்னது, இப்படி பல காட்சிகள்ல நிஜமாவே ‘ரிஸ்க்’ எடுத்து நடிச்சி இப்ப மத்தவங்களையும் சிரிக்க வச்சி அவரும் தயாரிப்பாளரா சந்தோஷமா இருக்கிறாருன்னு யூனிட்ல பேசிக்கிறாங்க.

Read Previous

விஜய் நடிக்கும் ‘தலைவா’ படத்தின் புதிய செய்திகள்

Read Next

ஜெனிஃபர் லோபஸ் நடிக்கும் ‘பார்க்கர்’

Most Popular