பார்க்கர் ஒரு திருடன், அந்தத் தொழிலில் அவன் கில்லாடி, ஆனாலும் அவன் எழுதப்படாத சட்டம் ஒன்றை வைத்திருக்கிறான். ஏழைகளின் வயிற்றில் அடிப்பதில்லை.ஏதும் அறியாத அப்பாவிகளைத் துன்புறுத்துவதுமில்லை.
அவனுக்கு
ஊரைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் சாக்கடையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இதுதான் “பார்க்கர் ” படக்கதை.
‘தி டிரான்ஸ்போர்ட்டர்’ பட நாயகன் ஜேசன் ஸ்டேத்தம் தான் பார்க்கரின் தலைமை பாத்திரம் ஏற்றுள்ளவர். ஆங்கிலப்பட ரசிகர்களின் கனவுக்கன்னி ஜெனிபர் லோபஸ் படத்தின் நாயகி, இருவருக்குமே தனித்தனி வரலாறு உண்டு.
ஜேசன் சாதாரண நிலையிலிருந்து உயர்ந்து மேலே வந்திருப்பவர் நம்மூரில் ஃபைட்டராக வந்து துணை பாத்திரம், வில்லனுக்கு உதவி, வில்லன் என்று படிப்படியாக கதாநாயகன் ஆவதுபோல் தான் இவரும் உயர்ந்தவர். முதலில் வெறும் டைவராக இருந்தவர். ‘டைவ்’ அடிப்பதில் தேசிய சாம்பியன் ஷிப் பெருமை பெற்றவர். வீரக்கலை பயின்றவர். பேஷன் மாடலிங் செய்தவர். ப்ளாக் மார்க்கெட் சேல்ஸ் மேனாகவும் இருந்து வாழ்க்கையில் பல்வேறு பகுதிகளில் வட்டமடித்தவர்.
இந்த பிரிட்டிஷ் நடிகர் படிப்படியாக தன்னை உயர்த்திக் கொண்டதன் விளைவு சில்வஸ்டர் ஸ்டாலன்,பிராட்பிட்,டென்னிஸ் ஃபேரினா,வின்னி ஜோன்ஸ்,ஜெட்லி என்று பிரபல நட்சத்திரங்களுடன் இணையும் வாய்ப்பைப் பெற்றார்.
‘தி ட்ரான்ஸ்போர்ட்டரி’ல் இவர் டூப் இல்லாமல் சண்டைக் காட்சிகளில் நடித்துப் புகழ் பெற்றவர். அதில் இடம்பெற்ற கார் சேஸிங், ஸ்குபா டைவிங் இவரை பேச வைத்தன. பிறகு மளமளவென படங்கள். ‘ரிவால்வர்’, ‘க்ராங்க்’, ‘லாக்’,
கலிபோர்னியாவில் கடலை பார்த்த மாதிரி 10,625,000 டாலரில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் இன்னொரு வீட்டையும் வாங்கியுள்ளார்.
ஒரு ஸ்டண்ட் மேனாக இருந்து நடிகனானதில் மகிழ்ச்சி, ‘தி எக்ஸ்பேன்டபிள்’ படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலன் போன்ற பெரிய ஸ்டாருடன் நடித்தது மறக்க முடியாது’ என்கிறார்.
ஜேசன் ஸ்டாத்தம் ஒருபக்கம் இப்படி என்றால் ஜெனிபர் லோபஸின் வரலாறு பெரியது. அமெரிக்க நடிகையான ஜெனிபர் லோபஸ் 40 வயதைக் கடந்தும் இளமை குறையாமல் கட்டுக் குலையாமல் கவர்ச்சி கலையாமல் களையுடன் இருப்பவர். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவில் வந்து தூக்கம் கலைப்பவர்.
ஜெனிபர் வெறும் நடிகை என்று மட்டும் கூறமுடியாது. நடனக்கலைஞர்,சுயதொழில் செய்யும் அதிபர்,பேஷன் டிசைனர், சினிமா தயாரிப்பாளர், பேச்சாளர் என்று பல முகங்கள் கொண்டவர்.
1986ல் ‘மை லிட்டில் கேர்ள்’ படத்தில் சிறு வேடத்தில் தோன்றி இன்று வணிக பலமுள்ள நட்சத்திரமாகியுள்ளார். இது திடீரென்று வந்துவிடவில்லை. பெற்றோருக்கு மூன்று மகள்களில் இரண்டவதாகப் பிறந்த ஜெனிபர் 5 வயதிலேயே நடன வகுப்பு, பாட்டு வகுப்பு சென்றவர். டென்னிஸ் வீராங்கனையும் கூட. தான் ஒரு சகலகலாவல்லியாக வரவேண்டும் என்பதே ஜெனிபரின் கனவாக இருந்தது. அப்படியே ஆனார். நிறைய மேடைகளில் தோன்றினார். பாடினார்,ஆடினார், திரைநடிப்பு ஒரு பக்கம் மியூசிக் ஆல்பம் ஒரு பக்கம் என பரபரப்பானார்.
உலகின் கவர்ச்சிகரமான பெண்கள் 100 பேரில் இவரது இடம் 3, ‘பீப்பிள்’ பத்திரிகை அதிகத் தொகை கொடுத்து இவர் படத்தை அட்டையில் வெளியிட்டது. ‘மை பேமிலி’,’மணிட் ரெய்ன்’, ‘ஜேக்’, ‘செவினா’, ‘அனகோ
பார்க்கர் படத்தை இயக்கியுள்ளவர் ‘டெய்லர் ஷாக் ஃபோர்டு’, ஆல்பங்கள் பல இயக்கியவர். பல படங்களில் பரிமளித்தவர். பார்க்கர் படக்கதை டொனால்டு ஈ வெஸ்லேக் எழுதிய ‘ஃப்ளாஷ்ஃபயர்’ நாவலை மையமாக்கி அதன் அடிப்படையில் உருவாகியிருக்கிறார். இப்படத்துக்கு இசை – டேவிட் பக்லி, ஒளிப்பதிவு – ஜே.மைக்கேல் மருரா ஸ்டுடியோ.
முழுநீள ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் படமான ‘பார்க்கர்’ 118 நிமிடங்கள் ஓடக் கூடியது. சுமார் 350 கோடிகள் செலவில் இப்படம் உருவாகியுள்ளது.
உலகமெங்கும் ஜனவரி 25ல் வெளியாக உள்ள ‘பார்க்கர்’ இந்தியமொழிகளிலும் வெளிவரவுள்ளது.
தமிழில் தமிழ்திரை நிறுவனம் சார்பாக நந்தன்,விஜயராம்,வி.மனோஜ் வழங்க தி சௌத் இந்தியன் கம்பெனி வெளியிடுகிறது.
இதுவரை ஜேசன் ஸ்டாத்தம் நடித்த படங்களிலேயே அதிகமான, மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கிறது.



