இந்திய அளவில் ஃபேஸ் புக் வலைதளத்தில் பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்.
அமிதாப்பச்சன், டெண்டுல்கர் ஆகியோரை விட ரகுமான் அதிக அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
இந்த செய்தியை பதிவிடும் போது ஏ. ஆர். ரகுமான் 1,01,46,572 ரசிகர்களைப் பெற்று முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 91,14,782 ரசிகர்களைப் பெற்று இரண்டாமிடத்திலும், அமிதாப்பச்சன் 36,03,631 ரசிகர்களைப் பெற்று ஐந்தாமிடத்திலும்ளும் உள்ளனர்.
சல்மான் கான் 75,38,736 ரசிகர்களைப் பெற்று மூன்றாம் இடத்திலும், அமீர் கான் 63,72,262 பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர்.