‘விஸ்வரூபம்’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.
படத்திற்கான முன்பதிவு அமோகமாக இருப்பதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளிடம் இப்படம் வெளியாகிறது.
சென்னை, மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட திரையரங்ககுளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் மிலாது நபி, குடியரசு தினம், ஆகிய விடுமுறை நாட்கள் வருவதாலும் வாரக் கடைசி என்பதாலும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்க , லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஜனவரி 24 அன்று பிரிமீயர் ஷோவாக திரையிடப்பட இருக்கிறது. ஹாலிவுட் நட்சத்திரங்களுக்காகவும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் இந்த ஷோ நடக்கிறது. இதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.