விக்ரம் நடிக்கும் ‘கரிகாலன்’ படம் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது.
விக்ரம், சரீன் கான், அஞ்சலி நடிக்க ‘கரிகாலன்’ என்ற படம் சில வருடங்களுக்கு முன் ஆரம்பமானது. கண்ணன் இப்படத்தை இயக்க ஆரம்பித்தார்.
அதன் பின், ‘செல்லமே’ காந்திகிருஷ்ணா இயக்கினார். சில பல காரணங்களால் இந்த படம் மேற்கொண்டு வளராமல் போனது.
இப்போது, இந்த படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ்குமார் மீண்டும் இப்படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், வரலாற்றுப் படமான ‘கரிகாலன்’ மீண்டும் ஆரம்பமாகும் வாய்ப்பு தெரிந்துள்ளது. மற்ற விவரங்கள் விரைவில்…