இயக்குனராகிறார் ஷகிலா…..

neelakkurinji poothu‘ஷகிலா’ யார் என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

சில வருடங்களுக்கு முன் மலையாள சூப்பர் ஸ்டார்களையே கதி கலங்க வைத்து மலையாள திரயுலகை கலக்கியவர். தொடர்ச்சியாக பல ‘சூப்பர் ஹிட்’ படங்களில் நடித்தவர்.

அதன் பின் சில ‘தூள்’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ போன்ற சில தமிழ்ப் படங்களிலும் ‘தலை’ காட்டியவர்.

இப்போது இயக்குனர் அவதாரம் எடுக்கப் போகிறார். ஆனால், அது தமிழில் அல்ல, மலையாளத்தில்.

அவர் இயக்கப் போகும் படத்திற்கு ‘நீலக்குறிஞ்சி பூத்து’ .  மகளை வளர்க்க ஒரு தாய் என்ன பாடுபடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. ஷகிலாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் பெயரில்தான் ‘நீலம்’ இருக்கிறதே தவிர, இது ஒரு குடும்பப்பாங்கான படமாம்.

 

 

Read Previous

விக்ரம் நடிக்கும் ‘கரிகாலன்’ மீண்டும் ஆரம்பம் ?

Read Next

‘கர்ப்பிணி’ வேடத்தில் நயன்தாரா…

Most Popular