அக்ஷய் குமார் நடித்த ‘ஜக்மி தில்’ (Zakhmi Dil), ரிஷி கபூர் – மனீஷா கொய்ராலா நடித்த ‘கன்யாதன்’ (Kanyadan) உட்பட நான்கு ஹிந்திப்படங்களை இயக்கியவர் ராஜு சுப்ரமணியன்.
தமிழில் சிக்கி முக்கி, மனிதாக இரு ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்.
ராஜு சுப்ரமணியன் என்ற பெயரை தமிழுக்காக சுப்ரமணியன் ஜனார்தன் என மாற்றிக் கொண்டு முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ‘கண்டனம்’ திரைப்படத்தை தமிழில் முதல் படமாக இயக்குகிறார்.
ராதா ராம்தாரி புரொடக்ஷன் – அசோக் கோஸுவாமி & ராம்தாரி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா பிப்ரவரி 1 அன்று பாடல்பதிவுடன் நடந்தது. படப்பிடிப்பை பிரபல இசையமைப்பாளர் (சங்கர் ) கணேஷ் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.
புதுமுகங்கள் விஷால், கார்த்திக் கட்டாக், சாய் ராகேஷ், கமலி மற்றும் ஜிடா மரியா ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. நிழல்கள் ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இளமையும் புதுமையுமாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு பி.ஆர்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெய் பிரகாஷ் இசையமைக்கிறார். செல்வி நடனம் அமைக்கிறார்.
வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் சென்னையில் ’கண்டனம்’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்குகிறது.