சந்தன கடத்தல் வீரப்பனைப் பற்றிய படமாகக் கருதப்படும் ‘வனயுத்தம்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இருந்த சிக்கல் நீங்கியது.
அக்ஷயா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் கிஷோர், விஜயலட்சுமி , அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை எதிர்த்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி , தன்னையும், தன் குடும்பத்தாரையும் பாதிக்கும் விதத்தில் படத்தில் உள்ள காட்சிகள் அவதூறாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முத்துலட்சுமி ஆட்சேபம் தெரிவித்த காட்சிகளை நீக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் சம்மதம் தெரிவித்ததையடுத்து, முத்துலட்சுமி தொடர்பான காட்சிகளை நீக்கி விட்டு ’வனயுத்தம்’ படத்தை வெளியிடலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.