விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் நேற்று முஸ்லிம் அமைப்புகளுக்கும், கமல்ஹாசன் தரப்பினருக்கும் இடையே தமிழக அரசு உள்துறை செயலர் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதன் மூலம் விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
முஸ்லிம் அமைப்புகள் 15 காட்சிகளை நீக்க கேட்டுக் கொண்டனர். கமல் தரப்பிலிருந்து 7 காட்சிகளை நீக்கவும், சில காட்சிகளில் வசன ஒலியை நீக்கவும் சம்மதம் தெரிவித்தனர். இதை முஸ்லிம் அமைப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லிம் அமைப்புகளின் சார்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபாவும், கமல்ஹாசனும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
முஸ்லிம் அமைப்புகள் தொடுத்திருந்த வழக்குகளை வாபஸ் பெறுவதுடன், போராட்டங்களையும் நிறுத்திக் கொள்கின்றனர்.
கமல்ஹாசன் தரப்பிலிருந்தும் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை வாபஸ் பெறுகின்றனர்.
கமல்ஹாசன் நீக்க சம்மதம் தெரிவித்த காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக நீக்கிய பிறகு படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
அநேகமா, அடுத்த சில நாட்களில் படம் வெளியாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.