SIFFAD விருதுகள் 2013

siffad-awardsதென் இந்திய திரையுலகத்தைச் சார்ந்த சிறந்த திறமைசாலிகளை கௌரவிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டதுதான் SIFFAD விருதுகள் .

வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்து விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மாபெரும் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த விருதுகள் வழங்கும் விழா கத்தார் தேசிய மாநாட்டு மையம், தோகா-வில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.

விருதுகளுக்குரிய நடைமுறைகள் உலகத்தரத்தில் நடைபெற உள்ளன. 2012ம் ஆண்டு வெளிவந்த தென்னிந்திய திரைப்படங்கள் தேர்வுப் பட்டியலில் இடம் பெறுகின்றன.

ஒரு முக்கியமான நடுவர் விருதுகளுக்குரியவர்களை தேர்வு செய்கிறார்.

சில வகை விருதுகள் வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப்படுகின்றன. இணையதளம், பத்திரிகை, இதழ்கள் மூலம் வாக்களிப்பு முறை நடைபெற இருக்கிறது.

தங்க முலாம் பூசப்பட்ட சிலை விருதாக வழங்கப்பட இருக்கிறது.

சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குனர், உட்பட 12 பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட உள்ளன.

தென்னிந்தியாவின் சாதனையாளர்கள் விருதும்  தேர்வு செய்யப்பட இருக்கிறது.

விழா நடைபெறும் நாளன்று மேடையில், விருது பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் விருதுகளை வழங்குவார்கள் .

இந்த விருது வழங்கும் விழா பற்றிய விவரங்கள் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டன.

Read Previous

விஸ்வரூபம் 7ம் தேதி வெளியீடு – கமல் அறிக்கை முழு விவரம்

Read Next

இது கதிர்வேலன் காதல் – ‘பாலி’யில் பாடல் உருவாகிறது