இது கதிர்வேலன் காதல் – ‘பாலி’யில் பாடல் உருவாகிறது

ithu-kathirvelan-kadhal‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’. எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில்  நயன்தாரா  சந்தானம், சூரி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கிய ஹாரிஸ் ஜெயராஜ் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்கும் இசையமைக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் மிகவும் விரும்பும் இசையமைப்பாளர் ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதற்கு தயாரித்த ‘ஆதவன்’, ‘ஏழாம் அறிவு’  படங்களுக்கும் ஹாரிஸ்தான் இசையமைப்பாளர்.

இப்போது ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் பாடல் கம்போஸிங் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஹாரிஸ் ஜெயராஜ் பாலி சென்றுள்ளார்.

மீண்டும் ஒரு சூப்பர் மியூசிக்கல் ஹிட்டுக்கு வெயிட்டிங் ஸார்….

Read Previous

SIFFAD விருதுகள் 2013

Read Next

‘பிஸி’ இயக்குனரானார் பிரபு தேவா

Most Popular