விஸ்வரூபம் படத்தின் ஹிந்திப் பதிப்பான ‘விஸ்வரூப்’ கடந்த வெள்ளியன்று வட இந்தியாவில் வெளியானது.
வெளியான மூன்று நாட்களிலேயே தோராயமாக 7 கோடி ரூபாயயை வசூலித்துள்ளது.
இது சென்ற மாதங்களில் வெளியான ஹிந்திப் படங்களான டேபிள் நெ.21 மற்றும் இன்கார் படங்களை விட சிறப்பான வசூலாம்.
விஸ்வரூப் படத்துடன் வெளியான ‘டேவிட்’ ஹிந்தித் திரைப்படம் 3 கோடிக்கும் குறைவாக வசூலித்துள்ள நிலையில் ‘விஸ்வரூப்’ படத்தின் வசூல் அதிகமாக உள்ளது.
நேற்று திங்களன்றும் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இந்த வாரமும் டீசன்டான வசூல் இருக்கும் என பாலிவுட் வட்டாரம் கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.