விஸ்வரூபம் திரைப்படம் யுஎஸ் (அமெரிக்கா) , யுகே (இங்கிலாந்து) போன்ற வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெளியான முதல் வாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஸ்வரூபம் இரண்டாவது வாரத்திலும் அதே வரவேற்பைப் தொடர்ந்திருக்கிறது.
பொதுவாக தமிழ்ப் படங்கள் யுஎஸ், யுகே போன்ற நாடுகளில் சில நாட்களுக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே திரையிடப்படும். ஆனால் விஸ்வரூபம் முதல் வாரத்தில் தினமும் 3 காட்சிகளாக பல நகரங்களில் திரையிடப்பட்டது.
இது இரண்டாவது வாரமான சென்ற வாரக் கடைசியிலும் பல நகரங்களிலும் தொடர்ந்தது.
இரண்டு வாரங்கள் முடிய யுஎஸ்-சில் மட்டும் வசூலித்த மொத்த தொகை 4.89 கோடி (9,16,745 டாலர்) , யுகே வில் வசூலித்த மொத்த தொகை – 1.86 கோடி (2,22இ693 யூரோ).
கடந்த வாரம் சில புதிய படங்கள் வந்தாலும் ‘விஸ்வரூபம்’ படத்தின் வசூல் சிறப்பாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.