நட்சத்திர கிரிக்கெட் CCL 3 நாளை ஆரம்பம்

ccl-3ந்திய திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி CCL 3  நாளை கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பமாகிறது.

பிப்ரவரி மாதம் 9ம் தேதி ஆரம்பமாகும் போட்டிகள் மார்ச் 9ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது.

2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த CCL நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி நட்சத்திரங்கள் அடங்கிய டீம்கள்  கலந்து கொண்டார்கள்.

சென்ற ஆண்டு, மலையாளம்,  பெங்காலி மொழி நட்சத்திரங்கள் அடங்கிய டீம்களும் புதிதாக சேர்ந்து கொண்டன.

இந்த ஆண்டு மராத்தி, போஜ்புரி மொழி நட்சத்திர டீம்களும் புதிதாக இடம் பெறுகிறது.

சென்னை ரைனோஸ், தெலுகு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ், வீர் மராத்தி, பெங்கால் டைகர்ஸ்,  போஜ்புரி தபாங்ஸ், மும்பை ஹீரோஸ் என மொத்தம் 8 அணிகள் இந்த ஆண்டு போட்டியில் கலந்து கொள்கின்றன.

சென்னை ரைனோஸ் அணிக்கு நடிகர் விஷால் கேப்டனாகவும், விக்ராந்த் துணை கேப்டனாகவும் உள்ளனர். மற்ற வீரர்களாக நடிகர்கள் ஆர்யா, ஜீவா, சிவா, விஷ்ணு, சாந்தனு, ரமணா, பிருத்வி, ரிஷிகாந்த், அப்துல்லா, உதயகுமார், பரத், ஜித்தன் ரமேஷ், ஷாம் இப்ராஷிம் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

சென்ற ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி கலந்து கொள்ளும்  போட்டிகள் விஜய் டிவில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

Read Previous

‘உற்சாகமான’ பார்த்திபன்

Read Next

உலக சினிமாவாகும் ‘சிங்கம் 2’