உள்ளூர் தாதாவையும், உள்ளூர் அரசியல்வாதிகளையும் எதிர்த்து, போராடி ஹீரோயிசம் செய்து நமது ஹீரோக்களுக்கு போர் அடித்து விட்டது போலும்.
எல்லோருக்கும் இப்போது ‘ உலக சினிமா ‘ எடுக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து விட்டது.
துப்பாக்கி, விஸ்வரூபம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து உலகப் பிரச்சனையை மையமாக்கி இயக்குனர் ஹரி ‘சிங்கம் 2’ படத்தை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நம் ஊர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சூர்யா, உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் ஒரு பிரச்சனையை எதிர்த்து போராடுவது போல் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, மலேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் படமாக்கப்படுவது அதை உண்மையாக்குகிறது.
படத்தின் டிரைலர் வரும் வரை எந்த பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும்..அதற்குள் அடுத்த போராட்டத்துக்கு யாராவது தயாராகி விடுவார்களோ ?