த்ரிஷா நடிக்கும் ‘ரம்’ ஆரம்பம்…

trisha-rumத்ரிஷா ஹீரோயினாக நடிக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகும் ‘ரம்’  (RUM – ரம்பா, ஊர்வசி , மேனகா) படத்தின் படப்பிடிப்பு 6ம் தேதி  துபாயில் ஆரம்பமானது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான எம்.எஸ்.ராஜு இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா தவிர, சார்மி, இஷா சாவ்லா, நிகிஷா படேல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தமிழில் இதற்கு முன் வெளிவந்த பையா, முரண் போன்ற ‘சாலை’ படங்களைப் போல் இந்த படமும் சாலையில் நடக்கும் ஒரு கதை என சொல்லப்படுகிறது.

 முதல் நாள் படப்பிடிப்பில் த்ரிஷா , ஸ்டண்ட் இயக்குனர் விஜயன் அமைத்த ஒரு ஆக்‌ஷன் காட்சியில் நடித்துள்ளார்.

 ” இப்படி, அப்படி என வேகமாகத் திரும்பும் கார்கள், வளைவுகள் நிறைந்த சாலைகள், சக்கரத்தின் அருகில் நான், ஹீரோக்கள் மீது அதிக மரியாதை வருகிறது”  என முதல் நாள் அனுபவத்தைப் பற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் த்ரிஷா.

ஆடிப் பாடி நடிச்சிட்டு, ஆக்‌ஷன் காட்சியில நடிக்கிறதுன்னா சும்மாவா….

Read Previous

உலக சினிமாவாகும் ‘சிங்கம் 2’

Read Next

தமிழ்ப் படத்தில் வித்யாபாலன் ?