இந்த உற்சாகம் நீங்க எல்லாரும் நினைக்கிற தப்பான உற்சாகம் இல்ல, நல்ல உற்சாகம், அதுவும் நாம் தந்த உற்சாகம்….
இரு நாட்களுக்கு முன் இயக்குனர், நடிகர் பார்த்திபன் அவர்களைப் பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
நமக்கு செய்தி வெளியிடுவது மட்டுமே தொழில். மற்ற இணையதளங்களை விட செய்திகளை முந்தித் தருவதிலும், வாசகர்கள் ரசிக்கும் விதத்தில் தருவதுமே நமது நோக்கம்.
நம் செய்தியை படித்த பார்த்திபன் அவருடைய ஃபேஸ் புக் மூலமாக நமது செய்தியை ஷேர் செய்து அவருடைய கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். நம் இணையதளத்தின் பெயரையும் அதில் குறிப்பிட்டிருந்தால் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்போம்.
ஃபேஸ் புக்கில் பார்த்திபன் நம் செய்தியைப் படித்து விட்டு பதிவு செய்தது இதோ,
” அகஸ்மாத்தாய் இந்த செய்தி கண்களை கவ்வ கூடுதலாய் உற்சாகம் தொற்றிக் கொண்டது…தேடல் தீராமல் இரண்டு தினங்களாய் ஒரு காட்டுக்குள் என்னை நானே தொலைத்து விட்டு வந்துள்ளேன். ஊற்றாய் சில புதியன – அதை நான் ரசித்த நிலையில் ரசிகர்களுக்கும் வழங்க முயற்சிக்கிறேன். பார்க்கலாம் ” என பதிவிட்டுள்ளார்.
உற்சாகம் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான், உங்களைப் போன்றே அகஸ்மாத்தாய் உங்கள் பதிவு எங்கள் கண்களை கவ்வ கூடுதல் உற்சாகம் அடைந்தோம்.
உங்கள் புதிய ஊற்றை உற்சாகமாய் அருந்த காத்திருக்கிறோம்…வாழ்த்துக்கள்…நன்றி…
நாம் வெளியிட்ட செய்தி….
பார்த்திபன் இயக்கத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ‘