‘தீயா வேலை செய்யும் சுந்தர் .சி,’ புகழும் ஹன்சிகா

hansikaநடிப்பிலிருந்து கொஞ்சம் விலகி மீண்டும் பரபரப்பான இயக்குனராகி விட்டவர் இயக்குனர் சுந்தர் .சி.  தற்போது, சித்தார்த், ஹன்சிகா நடிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் இயக்குனர் சுந்தர் . சி. வேலை பார்க்கும் விதத்தைப் பார்த்து அவரை ஹன்சிகா அட்டகாசமாகப் புகழ்ந்து தள்ளுகிறார்.

”இதுவரை நான் பணிபுரிந்த இயக்குனர்களிலேயே மிகவும் வேகமானவர் , அப்படி ஒரு வேகத்துடன் பம்பரமாக சுழன்று பணியாற்றுகிறார்” என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

அப்போது மட்டுமல்ல எப்போதுமே தயாரிப்பாளர்களின் செல்ல இயக்குனர் சுந்தர் .சி., அவ்வளவு வேகமாக படத்தை முடித்துக் கொடுப்பவர்.

இவர் இயக்கி,  விஷால், அஞ்சலி, வரு சரத்குமார் நடித்துள்ள ‘மதகஜ ராஜா’ வெளிவருவதற்குள்ளாகவே அடுத்த படமான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை ஆரம்பித்து பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

ஆமாம், படத்தோட டைட்டில்லயே ‘தீயா வேலை செய்யணும்’னு சொல்லிட்டாரே….

Read Previous

‘தலைவா’ பாடல்கள் ‘எல்லாமே சரவெடிதான்’ – ஜிவி. பிரகாஷ்

Read Next

துபாயில் அஜித் பட ஷுட்டிங்…