‘தலைவா’ பாடல்கள் ‘எல்லாமே சரவெடிதான்’ – ஜிவி. பிரகாஷ்

gv-prakashkumarவிஜய் , அமலா பால் நடிக்க விஜய் இயக்கி வரும் படத்திற்கு அதிரடியான பாடல்களை உருவாக்கி வருகிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார்.

விஜய் நடிக்கும் படத்திற்கு ஜிவி இசையமைப்பது இதுவே முதல் முறை.  இயக்குனர் விஜய் இயக்கத்தில் வந்த  கிரீடம்,  மதராசபட்டிணம், தெய்வத் திருமகள், தாண்டவம்,  படங்களைத் தொடர்ந்து தலைவா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்காக இதுவரை 3 பாடல்களை ஜிவி உருவாக்கியிருக்கிறார்.  நான்காவது பாடல் உருவாகி வருகிறது, இதற்கடுத்து ஐந்தாவது பாடல் உருவாகப் போகிறதாம் . மொத்தம் 5 பாடல்கள்.  மேலும் படத்தில் இரண்டு தீம் சாங்ஸ்-ம் இடம் பெறுகிறது.

தலைவா பாடல்கள் ‘எல்லாமே சரவெடிதான்’ என ஜிவி. பிரகாஷ்குமார் அவருடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Read Previous

தமிழில் இரண்டு படங்களில் காஜல் அகர்வால்

Read Next

‘தீயா வேலை செய்யும் சுந்தர் .சி,’ புகழும் ஹன்சிகா