துபாயில் அஜித் பட ஷுட்டிங்…

ajithவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற உள்ளது.

இதற்காக தனது குழுவினருடன் இன்று துபாய் புறப்பட்டுச் செல்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

துபாயில் நடைபெறும் படப்பிடிப்பில் ஒரு சில சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கப்படலாம் எனத் தெரிகிறது.

நிறைய வேலைகள் முடிக்க வேண்டி இருக்கிறது என இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே பதிவு செய்யப்பட்டுவிட்டன.

படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ‘வலை’ என வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாய் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும், விரைவில் தலைப்புப் பற்றிய அறிவிப்பும், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

‘தீயா வேலை செய்யும் சுந்தர் .சி,’ புகழும் ஹன்சிகா

Read Next

‘கல்யாண சமையல் சாதம்’ – ஒரு கல்யாண கலாட்டா