‘கல்யாண சமையல் சாதம்’ – ஒரு கல்யாண கலாட்டா

kalyana samaiyal satham_00004பிரசன்னா, சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு ‘திரைப்படத்தைத் தயாரித்த ஆனந்த் கோவிந்தன், அருண் வைத்தியநாதன் அடுத்து ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற படத்தை தயாரித்து வருகின்றனர்.

பல குறும்படங்களை இயக்கி விருதுகளை வென்ற ஆர்.எஸ். பிரசன்னா இந்த படத்தை இயக்குகிறார்.

ஒரு திருமணம் , அதைச் சுற்றி நடக்கும் பல வேடிக்கையான சம்பவங்களை மையமாக வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் இந்த படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பிரசன்னா நடிக்கும் படம், அவருடைய ஜோடியாக லேகா வாஷிங்கடன் நடிக்கிறார்.  டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில், கடந்த இருபத்தைந்து நாட்களாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Read Previous

துபாயில் அஜித் பட ஷுட்டிங்…

Read Next

விரைவில் விஸ்வரூபம் – 2 அறிவிப்பு…