புளூ ஓசன் பிக்சர்ஸ் சார்பாக பி. சித்திரைச் செல்வன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் தலைவன்.
திரைப்படக் கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் பாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறும் போது, ” இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. அதில் காமெடியும் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது.
பாஸ் – சந்தானம் – விடிவி கணேஷ் அடிக்கும் காமெடி கலாட்டா வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் இடம் பெறுகிறது.
பாஸ் சினிமாவுக்கு புதுமுகம், இருந்தாலும் பத்து பதினைந்து படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் போல் நடித்து அசத்தியிருக்கிறார். காமெடி காட்சிகளில் சந்தானத்துடன் இணைந்து நடிக்கும் போது அவ்வளவு டைமிங் சென்சுடன் இயல்பாக நடித்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
இந்த படத்தில் இதுவரை யோசித்திராத ஒரு தேசிய அளவிலான பிரச்சனையை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறேன். தவறு செய்பவன் திருந்தணும், தவறு செய்தவனுக்கு தண்டனையும் கிடைக்கணும், அதை அழுத்தமாக சொல்கிறேன்,” என இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறினார்.