விஜய் சிறப்பித்த ‘வத்திக்குச்சி’ இசை வெளியீடு

vathikuchi-audio-launchதமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் அவருடைய சொந்த கம்பெனியான ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ், ஃபாக்ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கும் ‘வத்திக்குச்சி’ படத்தின் மூலம் அவருடைய தம்பி திலீபனை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை, எக்ஸ்பிரஸ் அவன்யூவில் நடைபெற்றது.

நடிகர் விஜய் ‘வத்திக்குச்சி’ படத்தின் இசையை வெளியிட்டு, ஏ.ஆர். முருகதாஸ் தம்பியான நாயகன் திலீபனை திரளாக வந்திருந்த ரசிகர்கள் முன் அறிமுகப்படுத்தி வைத்தார். கொஞ்சம் அசந்தாலும் மேடையை நோக்கி முண்டியடித்துக் கொண்டு வந்திருப்பார்கள் ரசிகர்கள். அவ்வளவு ஆர்வம் விஜய்யைப் பார்ப்பதற்கு.   பெண்கள், குழந்தைகள் வேறு இருந்தார்கள், இன்னும் பாதுகாப்பை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.

”இதுவரைக்கும் எவ்வளவோ ஆடியோ ரிலீஸ் விழாக்களுக்குப் போயிருக்கிறேன், ஆனால் இப்படி இவ்வளவு கூட்டத்துக்கு முன்னாடி ஒரு இசை வெளியீடு நடக்கிறத இப்பத்தான் பார்க்கிறேன்”, எனப் பேசி ரசிகர்களின் கரகோஷத்தை மேலும் அதிகரித்தார்.

ஏ.ஆர். முருகதாஸ் பேசும் போது, ”விஜய் ஸாருக்கு இந்த விழாவுல கலந்துக்கணும்னு ஒரு எஸ்எம்எஸ் மட்டும்தான் அனுப்பினேன், போன்ல கூட பேசலை, ஆனால் அவர் நட்புக்கு மரியாதை வச்சி இந்த விழாவுல வந்து கலந்துக்கிட்டு சிறப்பிச்சாரு,” என்றார்.

விழாவில் ஏ.ஆர். முருகதாஸ், ‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குனர் கின்ஸ்லின், இசையமைப்பாளர் ஜிப்ரான், நாயகன் திலீபன், நாயகி அஞ்சலி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read Previous

சித்தார்த்துடன் காதல் இல்லை – சமந்தா மறுப்பு

Read Next

புதுமுகம் பாஸ் நடிக்கும் ‘தலைவன்’