ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் ராஜா பாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், பிரபு, ரகுமான், சரண்யா பொன்வண்ணன், மற்றும் பலர் நடிக்கும் படம் என்னமோ நடக்குது.
தேசிய விருது பெற்ற சரண்யா பொன்வண்ணன் இந்த படத்தில் நாயகன் விஜய் வசந்த் அம்மாவாக நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தைப் பற்றி விஜய் வசந்த் கூறுகையில், ” சரண்யா அவர்களின் அசுர நடிப்புக்கு பல படங்கள் உதாரணமாக உள்ளன. இப்படத்தில் எனது அம்மாவாக நடிக்கும் அவர் படம் முழுவதும் சென்னை பாஷை பேசி நடிக்க உள்ளார்.
அவர் கலகலப்பான அம்மாவாக நடித்த எம் மகன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய வெற்றிப் படங்களின் வரிசையில் ‘என்னமோ நடக்குது’ படமும் சேரும் என உறுதியாக சொல்லலாம்,” என்றார்.
இப்படத்திற்கான போஸ்டர்களை கருப்பு வெள்ளையில் உருவாக்கியிருப்பது மிகவும் சுவாரசியமாகவும், ஈர்க்கக் கூடிய வகையில் உள்ளதாகவும் அமைந்துள்ளது. இது பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.