எதற்கு தேடுகிறார் என்று யோசிக்க வேண்டாம்…நடிக்க வைக்கத்தான் தேடுகிறார்.
அந்த இயக்குனர் ‘நாக்க மூக்க’… என்ற ஒரே பாடலில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை ஓட வைத்த இயக்குனர் பி.வி. பிரசாத்.
அவர் தற்போது இயக்கி, நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கு ‘சகுந்தலாவின் காதலன்’ என்று பெயரிட்டுள்ளார்.
”சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு சுத்த தமிழ்ப் பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நானே இயக்கி, நடிப்பதால் தமிழ்த் தெரியாத பெண்ணை நடிக்க வைத்து கஷ்டப்பட நேரமில்லை, ”என்கிறார் இயக்குனர் பி.வி. பிரசாத்.
அழகான தமிழ் பேசத் தெரிந்த பெண்கள் இயக்குனர் பி.வி. பிரசாத்தை அணுகலாம்…