இனி இயக்கம் மட்டுமே… – பிரபு சாலமன்

prabu-solomonமைனா, கும்கி படங்களின் மூலம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் பிரபு சாலமன்.

ஷாலோம் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திலும் பங்குதாரராக இருந்து மைனா,  சாட்டை ஆகிய படங்களையும் தயாரித்தார்.

இப்போது அந்த பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகி விட்டார்.

இது குறித்து பிரபு சாலமன் கூறுகையில், ”தயாரிப்பு, இயக்கம் இரண்டிலும் கவனம் செலுத்துவது கடினமாக உள்ளது. அதனால் ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திலிருந்து விலகி விட்டேன். இனி ஷாலோம் ஸ்டுடியோஸில் ஜான் மேக்ஸ் மட்டுமே தயாரிப்பாளர். நான் இயக்கும் அடுத்த படத்தைப் பற்றி ஓரிரு நாட்களில் அறிவிப்பேன்,” என்றார்.

Read Previous

தமிழ்ப் பெண்ணைத் தேடும் இயக்குனர்…

Read Next

‘அமீரின் ஆதி பகவன்’ ஆக்‌ஷன் படம்தான்… – ஜெயம் ரவி