விஜய் – அசின் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தற்போது ‘தலைவா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கடுத்து ‘ஜில்லா’ படத்தில் நடிக்கப் போகிறார். இதற்கும் அடுத்து அவர் நடிக்கப் போகும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறதாம்.
மாற்றான் படத்திற்குப் பிறகு கே.வி. ஆனந்த் இந்த படத்தைத் தயாரிக்கப் போவதாகவும், விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவலன் படத்திற்குப் பிறகு அசின் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. போக்கிரி, சிவகாசி, காவலன் படங்களில் விஜய் – அசின் ஜோடியாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற் சொன்ன மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.
விரைவில் அடுத்த தகவல்…..