பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடித்துள்ள ‘பரதேசி’ படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு படம்.
பொங்கல் அன்றே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் இந்த மாதம் என்றார்கள், கடைசியாக மார்ச் 15ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோகணம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களை வெளியிட்ட ஜேஎஸ்கே பிலிம்ஸ் ‘பரதேசி’ படத்தை மொத்தமாக வாங்கிவிட்டார்கள்.
இவர்களுக்கு முன் மேலும் சில கம்பெனிகள் ‘பரதேசி’ படத்தை வாங்க முயற்சித்ததாக செய்திகள் வெளிவந்தன. பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்த படத்தை தயாரித்திருந்தது.