ஜில்லா பாடல் பதிவு ஆரம்பம்

vijay‘தலைவா’ படத்திற்குப்  பிறகு விஜய் நடிக்கவிருக்கும் படம் ‘ஜில்லா’ இந்த படத்தில் மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.

நேசன் இயக்கத்தில் இமான் இசையில் இப்படத்திற்கான பாடல் பதிவு ஆரம்பமாகியுள்ளது.

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலமாகத்தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின் இப்போதுதான் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார்.

மைனா, கும்கி, மனம் கொத்திப் பறவை ஆகிய படங்கள் இமான் இசையில் வெற்றிப் பட வரிசையில் இடம் பெற்றன.

மதன் கார்க்கி,  இமான் இசையில் எழுதும் முதல் பாடல் இப்படத்திற்காக பதிவாகும் வேலை ஆரம்பமாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

Read Previous

‘தலைவா’ படத்தில் அடுத்த நாயகி…

Read Next

‘பரதேசி’ – மார்ச் 15 ரிலீஸ்…