‘கண்ணா லட்டு தின்ன ஆசையா ’ படம் அதோட தயாரிப்பாளரான சந்தானத்துக்கு லட்சங்களை கொட்டுச்சோ இல்லையோ, அந்த படத்துல நடிச்ச பவர் ஸ்டாருக்கு லட்சங்களை கொட்டிட்டே இருக்கு.
இன்னைய தேதியில பிஸியான ஆர்ட்டிஸ்டா அவர்தான் இருக்காரு போல.
‘ஒன்பதுல குரு’ படத்துல ஒரு பாட்டுக்கு நடனமாடினவரு, தொடர்ந்து ‘சும்மா நச்சுனு இருக்கு,’ ‘அழகன் அழகி’ ஆகிய படங்கள்லயும் ஒரு பாட்டுக்கு நடனமாடி அசத்தியிருக்காரு.
அந்த காலத்துலலாம் சில்க் ஸ்மிதா, அனுராதா இப்படி இவங்க ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனமாடி படங்களை விக்கிறதுக்கு உதவுனாங்க. அடுத்து பல முன்னணி ஹீரோயின்களே அப்படி ஆட ஆரம்பிச்சாங்க. அதுல வடிவேலு கூட நடனமாடினதால் மார்க்கெட் போன ஸ்ரேயா உட்பட பலர் இருக்காங்க.
இப்ப அந்த இடத்தை நம்ம பவர் ஸ்டார் பிடிச்சிருக்காரு….இது இதோட நிக்குமா இல்லை தொடருமான்னு அவருக்குதான் தெரியும்…
வர்ற லட்சங்களை யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா…